top of page
Our Academics - 
கல்வித் திட்டங்கள்
thiruvalluvar-png-4.png

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள தனது தாய்மொழி கற்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். இன்றைய உலகில் வெளிநாட்டில் வாழும் தமிழ் குடும்பங்களில் பல குழந்தைகள் இந்த வாய்ப்பு ஏதும் இன்றி வளர்கிறார்கள். 

 

பாரதி தமிழ்ப்பள்ளியில் இளைய தலைமுறையினருக்கு அதாவது குழந்தைகளுக்கானத் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  'மொழியின் எல்லையே சிந்தையின் எல்லை' என்பதற்கு இணங்க பேசுதல், எழுதுதல், வாசித்தல் என்ற மொழியின் அடிப்படை நிலைகளைக் கருத்தில் கொண்டு தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. குழந்தைகளின் பிறமொழிச் சூழலைப் புரிந்து, பொறுமையாகவும் இனிமையாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

 

தமிழ்

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இங்கு தமிழ் மொழியின் அடிப்படை இலக்கணம் கற்றுக்கொள்ளுதல்

conversation-gray-md.png

உரையாடல்

தமிழ் வார்த்தைகளுக்கானப் பயிற்சிகள் செய்தல். ஒரே ஓசையுடைய சொற்களை உச்சரித்துப் பழகுதல். தமிழ் மொழி உரையாடல்களில் அதிக கவனம் செலுத்துதல்

எழுத்து

உயிர்மெய்யெழுத்துக்கள் எழுதிப் பழகுதல். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சின்ன சின்ன வாக்கியங்கள் எழுதக் கற்றுக்கொள்ளுதல்

வகுப்பு

வாரம் ஒரு முறை நடைபெறும்.   வகுப்பு நடைபெறும் நேரம் ஒன்றரை மணி நேரம்.

book.png

படிக்க

உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் அறிதல். திருக்குறள் ஒப்புவித்தல். கதைகளை சுயமாக வாசிக்கப் பழகுதல்

together-icon.png

கலாச்சாரம் 

தமிழ் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு கற்றல்

bottom of page