Meet The Team

Muralidharan
Principal
Message from Principal
உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும், தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழின் பெருமையைப் பறைசாற்றாமல் எவரும் இலர். நமது சூழ்நிலை, வேலை நிமித்தம் காரணமாக தாய்நாட்டை விட்டுவிட்டு வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் தமிழ் மொழி, செம்மொழி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதே இளமையோடு நம்மை வாழ்விக்கிறது. நாம் கற்ற தாய் மொழியை நமது அடுத்த தலைமுறைக்கும் இனிதே கற்றுக்கொடுப்பது நமது தலையாய கடமை.
வெளிநாட்டு வாழ் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொல்லிக்கொடுக்க முடியும், ஆனால் அதை ஒரு முறை படுத்தப்பட்ட வழியிலேயே அதனை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தொடங்கப்பட்டதே பாரதி தமிழ் பள்ளி. கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் துணையோடு 2012ம் ஆண்டில் இருந்து International Tamil Academyயின் பாட திட்டத்தின் படி நடத்திக்கொண்டு வருகிறோம். இங்கு குழந்தைகளுக்கான முன்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளை நடத்துகிறோம். பள்ளியின் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து உதவியாளர்களும் முழுக்க முழுக்க நமது தன்னார்வலர்கள் மட்டுமே. இத்தகைய தன்னார்வலர்கள் ITA கல்வி வழிகாட்டுதல்களின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி குழந்தைகளுக்கு உயர்ந்த தரத்தில் கற்பிக்கிறார்கள்.
கல்வியுடன் தமிழின் பெருமையை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு புகட்டுகிறோம். நாடகமும், நடனமும் இணைந்த பொங்கல் நிகழ்ச்சி, தமிழின் சொல்வண்மை காட்டும் தமிழ் தேனி மற்றும் CT Colt போட்டிகள், தமிழ் இசையோடு துவங்கி, நமது அனைத்து கலைகளையும் அழகுபடுத்தும் பாரதி பள்ளியின் ஆண்டு விழா. இத்தகைய மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை சிறந்த முறையில் காக்கும் எங்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களே உறுதுணை. எங்களின் இந்த பணி மேலும் சிறக்க, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றுவோம்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
Administrative Team


Jesu Rajasekar Thasnavis
Associate Principal

Menaka Tamilvanan
Associate Principal

Anuradha Senthilkumar
Treasurer

Senthil Kalaimani
IT & Social Media Admin


Magesh Ramalingam
Vice Principal

Anitha Srinivasan
Vice Principal

Kumaraguru
Vice Principal

Shanmuga Raja
Vice Principal


Varun Sureshkumar
Vice Principal

Viji Manikandan
Vice Principal

Sudhaa Ramakrishnan
School Coordinator

Nithya Rajasekar
Exam Coordinator


Chandrasekar
Joint Treasurer

Suriyakumar
Book Officer

Join Us
Volunteer
Apply Today
Volunteers are the biggest support for Bharathi Tamil School. The self-volunteering teachers take classes for the kids. Without the countless hours from the self-volunteering teachers, we would not have had opportunity to have the kids learn Tamil. We continue to work year after year to support kids learning Tamil. We truly appreciate that you have joined us in this journey.
Become a Volunteer Teacher and experience the wonderful opportunities Bharathi Tamil School has to offer.
Contact us if you are interested.